ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 24 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் அலமேலு அனைவரையும் வரவேற்றார்.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி தலைமை தாங்கினார். பெங்களூரு சாலிடன் டெக்னாலஜிஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கணேஷ் தேவராஜ் சிறப்பு விருந்திராக கலந்துகொண்டு தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் சிவில் இன்ஜினியரிங் ஆகிய துறைகளை சேர்ந்த 501 பேருக்கு பட்டம் வழங்கினர்.

மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் முதல் மதிப்பெண் பெற்ற 15 பேருக்கு தங்கப்பதக்கங்களும் சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினர் பேசுகையில், பட்டம் பெற்ற மாணவர்கள், தொழில் நிறுவனங்கள் அடுத்து தரக்கூடிய சவால்களை விழிப்புணர்வுடன் எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

ஆரம்பத்தில் அவரது வாசிப்புப் பழக்கத்தைப் பற்றி விரிவாகக் கூறி, பட்டதாரிகளை வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டினார். அவரது வாழ்க்கையிலிருந்து அனுமானங்களை மேற்கோள் கூறி, மாணவர்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதனையும், சமுதாயத்தில் நன்மதிப்பை பெற சிறந்த பழக்கவழக்கங்கள், ஒருங்கிணைப்பு, கடின உழைப்பு, தனித்துவ சிறப்பம்சம் மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மாணவர்களை வலியுறுத்தினார்.

இறுதியாக அவர், வளர்ச்சி மனப்பான்மையின் மீது மாணவர்கள் எவ்வாறு கூடுதல் கவனம் பெற்று அதன் மூலம் பெரிய உயரங்களை அடைய முடியும் என்பதனை விரிவாக எடுத்துரைத்தார்.