கோவையில் சகோதரி நிவேதிதா 155 வது பிறந்தநாள் விழா

சமுதாய நல்லிணக்க பேரவை கோவை மாநகர் மாவட்டம் சார்பில் சகோதரி நிவேதிதா 155 வது பிறந்தநாள் விழா நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் கலை அரங்கில் நடைபெற்றது. சகோதரி நிவேதிதா சமூக சேவகியும், எழுத்தாளரும், ஆசிரியையும், சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும் ஆவார்.

நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர் கல்லூரி வணிகவியல் துறை தலைவர் கவிதா முன்னிலை வைத்தார். சமுதாய நல்லிணக்க பேரவையின் கோவை மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் திருலோக சந்தர் தலைமை தாங்கி பேசினார். விழாவில் கரூர் சாரதா நிகோதன் மகளிர் கல்லூரி செயலாளர் நீலகண்ட பிரியா அம்பா பங்கேற்று பேசினார்

நிகழ்ச்சிக்கு முன்பாக கொங்கு பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளையின் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சி சிங்கை வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி வரலாற்றுத்துறை துணைப்பேராசிரியை சுகுணா, சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம் பொறுப்பாளர் முருகன் மற்றும் கோவை மண்டல பகுதியில் உள்ள கல்லூரிகளின் கல்வியாளர்கள் சமூக சமுதாய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.