எஸ்.என்.எஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பட்டமளிப்பு விழாவை எஸ்.என்.எஸ் நிறுவனங்களின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் செந்தூர்பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் எஸ்.என்.எஸ் நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல்குமார் கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து இரு நிறுவனங்களின் முதல்வர்களும் அந்தந்த நிறுவனங்களின் ஆண்டு அறிக்கை மற்றும் சாதனைகளை சமர்ப்பித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெங்களூரு கேப்ஜெமினி இன்ஜினியரிங் இயக்குநர் அன்பரசன், மாணவர்கள் சமூக பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று பட்டதாரிகள் மத்தியில் உரையாற்றினார்.

மேலும் சமூக வளர்ச்சிக்கு சாத்தியமான சிறிய சிறிய கண்டுபிடிப்புகளை பட்டதாரிகள் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிகழ்வில் 1047 எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி பட்டதாரிகள் மற்றும் 456 எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றனர். முதலிடம் பெற்ற பட்டதாரிகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் கௌரவிக்கப்பட்டனர். எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சார்லஸ் நன்றியுரை வழங்கினார்.