எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் அமைந்துள்ள எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 2002 முதல் 2021 வரை பயின்ற எட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

முன்னணி தொலைக்காட்சி பிரபலங்கள், பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரபல பின்னணி பாடகி ஆன்ட்ரியாவின் இசை கச்சேரி நடைபெற்றது.

எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார் தலைமை ஏற்று பல முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.