இந்துஸ்தான் கல்லூரியில் கராத்தே பெல்ட் தேர்வு

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சாமுராய் கராத்தே பள்ளி சார்பாக பெல்ட் தேர்வு மற்றும் அடுத்த நிலை பெல்ட் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முதல்வர் ஜெயா மற்றும் சாய் காய் டூ மரபு வழி கராத்தே மற்றும் விளையாட்டு அமைப்பின் சென்சாய் சாய் புரூஸ் கலந்து கொண்டனர்.

கல்லூரி முதல்வர் ஜெயா தனது சிறப்புரையில் தற்காப்பு கலைகளின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பு கலைகளை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பெற்றோர்களின் பங்கினை எடுத்துரைத்தார். சென்சாய் சாய் புரூஸ் பேசும் பொது, தற்காப்பு கலைகள் கற்பது அடிப்படை நிலையுடன் நில்லாமல் மேற்கொண்டு கற்பதோடு போட்டிகளில் பங்கு பெறவும் அறிவுறுத்தினார்.

இந்த தேர்வில் பங்கு பெற்று வெற்றி வாகை சூடிய அனைத்து மாணவ மாணவியருக்கும் இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன் மற்றும் நிர்வாக செயலாளர் பிரியா சதிஷ்பிரபு, வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியானது சாமுராய் கராத்தே பள்ளியின் இயக்குனர் அருணாச்சலம், தலைவர் முருகானந்தம், துணை தலைவர்கள் செல்வகுமார், வெள்ளிங்கிரி மற்றும் இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பாக லெப்டினென்ட் ரவிகுமார், என்.சி.சி படைப்பிரிவு தளபதி மற்றும் ஆங்கில துறை உதவி பேராசிரியை நர்மதா ஆகியோர் மேற்பார்வையில் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.