கே.பி.ஆர் கல்லூரியில் ரத்த தான விழிப்புணர்வு

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின், போதை மருந்து எதிர்ப்பு, மற்றும்
ரெட் ரிப்பன் கிளப் சார்பில் “ரத்த தானம் விழிப்புணர்வு மற்றும் ரத்தம் கொடையளிப்பு“ நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலுசாமி, கல்லூரியின் ஆலோசகர் மற்றும் செயலர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கோவை, சாந்தி சமூக சேவைகள் இரத்த வங்கி PRO, சமூக ஆர்வலர் சுரேஷ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவத்தை விளக்கினார். தொடர்ந்து ரத்த தானம் செய்வதால் ரத்த அழுத்தம் குறைவதோடு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறையும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

கோயம்புத்தூர், கொங்கு குருதிக் கொடை நிறுவனர், சந்தோஷ் நடராஜன், தன்னார்வ ரத்த தானம் செய்பவர்கள் மனித குலத்தின் மீட்பாளர்கள் என்று கூறினார். ஒருவர் தன்னையும் மற்ற சக உயிர்களையும் உண்மையிலேயே நேசிக்கிறார் என்றால், அதை வெளிப்படுத்த ஒரே வழி ரத்த தானம் செய்வதுதான் என்று வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் புல முதன்மையர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.