ஆர்.வி. கல்லூரியில் கருத்தரங்கம்

காரமடை, டாக்டர். ஆர்.வி‌.கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறைப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கணினி சார் வணிகவியல் துறைத்தலைவர் ஜாலி வினி ஷீபா அனைவரையும் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் ரூபா தலைமை வகித்தார். கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் முதுநிலை வணிகவியல் ஆராய்ச்சித்துறையின் உதவிப்பேராசிரியர் பத்மநாபன் சிறப்பு விருந்தினராகப் கலந்து கொண்டார்.

அவர் ‘2022 இல் தொழில்முறை நெறிமுறைகளின் தலைவர்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி பேசிய உரையில், தலைமைப் பண்பிற்கான தகுதிகள், அதனை மேம்படுத்துவதற்கான வழி முறைகள், பயமின்மை, தொடர்புத்திறன், மொழிப் புலமை, அழகியல் தன்மைகளை வளர்த்துக் கொள்ளுதல்’ குறித்து பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.