கொங்குநாடு கல்லூரியில் பாரதியார் நினைவுநாள் சிறப்புச் சொற்பொழிவு

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில், மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு, சிறப்புச் சொற்பொழிவு மற்றும் புகைப்படக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக மகாகவி பாரதி புகைப்படத்திற்கு பேராசிரியர்கள், மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் சுயநிதிப்பிரிவுத் தமிழ்த்துறைத் தலைவர் அரிச்சந்திரன் வரவேற்புரை வழங்கினார். அதனைத்தொடர்ந்து கல்லூரியின் கொங்கு இசைமன்ற மாணவர்கள் பாரதியார் பாடல்களைப் பாடி புகழஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் பரதியாரின் வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சியினைத் திறந்து வைத்துக் கல்லூரி முதல்வர் இலட்சுமணசாமி தலைமையுரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பள்ளித் தலைமையாசிரியர் சுகுணா கலந்துகொண்டு “மானுடம் பாடிய வானம்பாடி” எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

அவர் பேசுகையில்: கல்லூரி மாணவர்களுக்கு, “நம்மை நாமே உணர்ந்துகொள்ள பாரதியாரின் பாடல்கள் துணை நிற்கும்” என்பதனை பாரதியின் பாடல்கள் மற்றும் அவரது வாழ்க்கை வரலாற்றின் வாயிலாக எடுத்துரைத்தார்.

நிகழ்வின் நிறைவாகத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா் அபினாஷ் குமார் நன்றியுரை கூறினார். இந்நிகழ்வில் தமிழ்த்துறை மற்றும் பிற துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.