கே.ஐ.டி கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அனைவரும் பட்டாடை உடுத்தி, அத்தப் பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையின் சிறப்புகளை பாடியும் ஆடியும் வெளிப்படுத்தினர்.

ஓணம் பண்டிகையின் சிறப்பை பற்றியும், மாபலி சக்கரவர்த்தியின் வரலாறு,
வாமண அவதாரத்தின் மூலம் ஸ்ரீமந்நாராயணன் இவ்வுலகை மூன்றடிகளால் அளந்து மகாபலி
சக்கரவர்த்தியின் அகம்பாவத்தை வேரறுத்தது மற்றும் ஒவ்வொரு வருடமும் இந்த திருவோண
நன்னாளில் மகாபலி சக்கரவர்த்தி தம் மக்கள் செழிப்புடன் வாழ்வதைக் காண பூமிக்கு வருவதற்கான வரம் பெற்றது, மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கவே மக்கள் அத்தப் பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடி வருவதையும் காணொலி படம் மூலமாக விளக்கப்பட்டது.

இவ்விழாவில் கல்லூரி துணைத்தலைவர் இந்துமுருகேசன், கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, கல்லூரி துணை முதல்வர் ரமேஷ் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர்.