வருங்காலத்தில் தங்கத்தின் மதிப்பு குறையும் – பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்

தமிழ்நாடு ஜி.எஸ்.டி ப்ரபோஷனல் அசோசியேஷன் சார்பாக, ஜி.எஸ்.டி ட்ரிபியூனல் தொடர்பான கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறும் போது: ஜி.எஸ்.டி ட்ரிபியூனல் என்பதை நியாயமான கருத்தாக தாம் பார்ப்பதாக குறிப்பிட்டார். ஜிஎஸ்டி பதில்களை சரியாக பிரிக்கபடும் போது, ட்ரிபியூனல் இல்லை என்றால் பிந்தைய காலத்தில் சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளதாக பார்லிமெண்டில் முன்னால் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியதை நினைவு கூர்ந்த அவர், இந்த ட்ரிபியூனலை அமல்படுத்த தெரிவித்தார்.

தவறுகள் நடைபெறும் பொழுது அதனை சுட்டி காட்டும் பத்திரிகை சுதந்திரம் முழுமையாக இருக்கபட வேண்டும். ஆனால் இன்று எதிர்க்கேள்வி கேட்டால் கேட்பவர்களை முடக்கி வைக்கும் நிலை உள்ளது என்றார்.

மேலும் பேசிய அவர், பங்கு சந்தை நிச்சயம் இறங்கும் நிலை உள்ளது. வட்டி விகிதம் ஏற, ஏற வருமானம் குறையும். ஒரு முறை இறங்கி, மீண்டும் ஏறியதாகவும் கூறினார். ஆனால் வருங்காலத்தில் பங்கு சந்தை இறங்க வாய்ப்பு உள்ளது என்றார். பணமதிப்பு இறங்கும், தங்கத்தின் மதிப்பு குறையும், பங்கு சந்தையும் இறங்கும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், இச்சங்கத்தின் மாநில தலைவர் முஹம்மது அஸ்கர், மாநில இணை செயலாளர் ஷாஜகான், சிறப்பு பேச்சாளர்கள் வழக்கறிஞர் நடராஜன், டேக்ட் ஜேம்ஸ், வழக்கறிஞர் ஜெயக்குமார், சார்ட்டட் அக்கௌன்ட் ஸ்ரீதர், இந்திய தொழில் முனைவோர் சங்கம் சார்பாக ரகுநாதன் மற்றும் விஜய் கேசவன் என பலர் கலந்து கொண்டனர்.