விலைவாசி உயர்வை கண்டித்து கோவையில் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் மற்றும் மாவட்ட செயலாளர் சிவசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, உத்தேச மின் கட்டண உயர்வை அமுல்படுத்த மாநில அரசை நிர்பந்திக்காதே, உள்ளாட்சி அமைப்புகளின் சொத்து வரி, வீட்டு வரி உயர்வை திரும்பிபெறு உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதில் 180 பெண்கள் உள்பட 372 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.