வி.எல்.பி ஜானகியம்மாள் கல்லூரியில் புகைப்படக் கண்காட்சி

கோவைப்புதூர், வி.எல்.பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் காட்சி ஊடகவியல் துறை சார்பாக ரிஃப்ளக்டா-22 என்ற தேசிய அளவிலான புகைப்படக் கண்காட்சி, விழி வழி அகம் சங்கத் துவக்க விழாவும் மற்றும் முன்னாள் மாணவர் சந்திப்பும் நடைபெற்றன.

நிகழ்வில் கல்லூரியின் துணை முதல்வர் வாசுதேவன் தலைமை உரை வழங்கினார். இந்நிகழ்விற்கு நியூஸ் 7 செய்தித் தொகுப்பாளர் அங்கயற்கண்ணி மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா முதன்மைப் புகைப்படக் கலைஞர் ஜாக்சன் மற்றும் தமிழ், மலையாளம் பிக் பாஸ் நிகழ்வு எடிட்டர் மற்றும் முன்னாள் மாணவி தனிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கயற்கண்ணி தனது சிறப்புரையில், ஊடகத்துறை சார்ந்த பல அனுபவங்களைக் கூறி, மாணவர்கள் தடைகள் தாண்டி பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

முதன்மைப் புகைப்படக் கலைஞர் ஜாக்சன் தனது சிறப்புரையில், தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, ஊடகத்துறையில் மொழியின் தடைகளையும் சவால்களையும் குறித்து தனிகா கலந்துரையாடினார்.

நிகழ்வின் நிறைவாகப் புகைப்படப் போட்டியின் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.