“சுயதொழில் தொடங்க நல்ல குறிக்கோள் அவசியம்”

சுயமாக தொழில் தொடங்குவதற்கு முதலாவதாக நல்ல குறிக்கோள் அவசியம் என டாக்டர்.ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பாக நடைபெற்ற பேரவைக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வணிகவியல் துறைத்தலைவர் தேவப்பிரியா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார்.

மேட்டுப்பாளையம், இன்னர் வீல் கிளப்பின் முன்னாள் தலைவர் மற்றும் தொழில் முனைவோர் லக்ஷ்மிபிரியா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில்: சுயமாக தொழில் தொடங்குவதற்கு முதலாவதாக நல்ல குறிக்கோள் அவசியம். நாம் நினைத்த குறிக்கோளை அடையும் வரை எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்கக் கூடாது. தவறான பாதையை தேர்ந்தெடுக்க கூடாது. தொழில் முனைவோராவதற்கு ஆண், பெண் என்ற வேறுபாடு கிடையாது. எந்த தொழிலையும் பெண்களால் செய்ய முடியும்.

தொழில் செய்யும் இடங்களில் எத்தனையோ இன்னல்களை பெண்கள் சந்திக்கின்றனர். பெண்களை அடிமைப்படுத்த கூடாது. தொழில் செய்வதில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று பல கருத்துக்களை எடுத்துரைத்தார்.