டிக்கெட் ரத்து செய்தால் ஜி.எஸ்.டி சேர்த்து வசூலிக்கப்படும் – IRCTC நிறுவனம்

இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு கவலை தரும் வகையில் முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளிட்டுள்ளது.

ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள பல்வேறு வசதிகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அதே நேரத்தில் புதிய தகவலை வெளியிட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளடைக்கிறார்கள்.

அந்த வகையில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் உறுதியான பிறகு, ரத்து செய்யப்பட்டால் கேன்சலேஷன் கட்டணம் பொதுவாக வசூலிக்கப்படும். தற்போது அதோடு ஜி.எஸ்.டியும்   விதிக்கப்படும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டது.

இது தொடர்பாக ஆகஸ்ட் 3 ம் தேதி நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது அதன் சேவையை பெறுவதற்கான ஓப்பந்தம் போன்றது அதற்கான டிக்கெட் உறுதியான பிறகு அதனை ரத்து செய்தால் ரயில் சேவை வழங்கும் IRCTC நிறுவனத்துக்கு இழப்பீடாக கேன்சல் கட்டணத்தோடு இனி அதற்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டியும்   சேர்ந்து வசூலிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.