பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பாக மருத்துவ முகாம்

ரோட்டராக்ட் கிளப் கோயமுத்தூர் டெக்சிட்டி, பி.எஸ்.ஜி மருத்துவமனை மற்றும் உதவும் கரங்கள் இணைந்து கோவையில் மாபெரும் மருத்துவ முகாம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இம்முகாம் முதல் நாள் கோவை கோண்டிநகரிலும், இரண்டாம் நாள் சுந்தராபுரம், கோவை அண்ணா காலனி, துடியலூரிலும் நடைப்பெற்றது.

சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்த முகாமில் இ.சி.ஜி, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் மற்றும் எலும்பு சிறப்பு மருத்துவமும் பார்க்கப்பட்டது. முகாமில் பங்கு கொண்டவர்களின் நோய் என்னவென்று அறிந்து அதற்கேற்ற மருந்துகளும் இலவசமாக அளிக்கப்பட்டது.

இந்த முகாமில் ரோட்டராக்ட் கிளப் கோயம்முத்தூர் டெக்சிட்டி தலைவர் சஞ்சுளா மற்றும் முகாமின் நிகழ் தலைவர் சஞ்சிதா ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும் டெக்சிட்டி மன்ற உறுப்பினர்கள், பி.எஸ்.ஜி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவும் கரங்கள் தன்னார்லவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.