இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 10 மணிநேரம் விளையாடி சாதனை

தேசிய விளையாட்டுத் தினத்தை முன்னிட்டு கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பாக அக்கல்லூரியின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தொடர்ந்து 10 மணி நேரம் அனைத்து விளையாட்டுகளையும் விளையாடி சாதனை படைத்துள்ளனர்.

இவ்விளையாட்டில் கூடைபந்து, கால்பந்து, கைபந்து, எறிபந்து, ஃஹேண்ட்பால், டென்னிஸ், இறகுப்பந்து, கிரிக்கெட், சதுரங்கம், கேரம், டேபில் டென்னிஸ், யோகா, தடகளம் போன்ற அனைத்து விளையாட்டுகளிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் 520 பேர் பங்கேற்றனர். இந்த 10 மணிநேர தொடர் விளையாட்டை தேசிய விளையாட்டு தினத்திற்கு அர்ப்பணிப்பதாக இதனை மேற்கொண்டனர்.

இத்தொடர் விளையாட்டினை இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதிகண்ணையன் துவக்கி வைத்தார். மேலும் நிர்வாக செயலாளர் பிரியாசதீஸ்பிரபு, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.