ராம்கோ நிறுவனம் சார்பில் கட்டிட தொழிலாளர்களுக்கு பாராட்டு

ராம்கோ சிமெண்ட் நிறுவனம் சார்பில் கட்டிடத்துறையில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சி கோவை ராம்நகரில் உள்ள மங்களா இண்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற்றது.

ராம்கோ சிமெண்ட் சூப்பர் கிரேடு பிராண்ட் 25 வது ஆண்டு விழாவை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதுநிலை பொது மேலாளர் சண்முகராஜா ஹரி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை மார்க்கெட்டிங் உதவி பொது மேலாளர் விக்னேஷ் வரவேற்று பேசினார்.

கட்டிட தொழிலாளர்களால் உழைப்பால் 500 சதுர அடி முதல் 50 லட்சம் சதுர அடி வரை கட்டிடங்கள், வீடு, கடை, அலுவலகங்கள், வணிக வளாகங்கள் என கம்பீரமான கட்டுமான பணிக்கு தொழிலாளர்களின் கடுமையான உழைப்பு இன்றியமையாதது. இவர்களை கௌரவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள கட்டிட துறையில் உள்ள தொழிலாளர்கள், மேசன், மேஸ்திரி கண்காணிப்பாளர் பணியை பாராட்டி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கட்டிட துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள், மேஸ்திரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மேஜிக் ஷோ மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.