கே.பி.ஆர் கல்லூரியில் கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டி

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையமும், கோயம்புத்தூர் மக்கள் சேவை மையமும் இணைந்து மகளிர் மேம்பாட்டு மையம் தொடக்க விழா மற்றும் கைத்தறி ஆடை அணிவகுப்பு விழா நடத்தியது.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலர் மற்றும் ஆலோசகர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பொது மருத்துவர் சூர்யபிரபா, கலந்து கொண்டு மாணவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான உடல், உள நலக் கருத்துக்கள் குறித்தும், பிரச்சினைகளை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

நிகழ்வினைத் தொடர்ந்து கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையமும் மற்றும் மக்கள் சேவை மையம் இணைந்து கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்வை நடத்தினர்.

இந்நிகழ்வில் 54 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளில் நடைபெற்ற கைத்தறி ஆடை அணிவகுப்பில் கணினி அறிவியல் தகவல் தொடர்பியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவன் ஸ்ரீ ராம் மற்றும் வணிகவியல் வங்கி காப்பீட்டுத் துறை மாணவி அபிராமி இருவரும் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.

இந்நிகழ்வில் கல்லூரி துறை சார் புல முதன்மையர்கள், பேராசிரியர்கள் என 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.