கே.பி.ஆர் கலைக் கல்லூரியில் 76 வது சுதந்திர தின விழா

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில், 76 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்விற்கு சிங்கப்பூர், Microsoft Operations Pte Ltd, Asia Lead – License & Contract Compaliance, ஹர்ஷா ராமையா மற்றும் சென்னை, ஸ்கில்ஸ் டிஏ, நிறுவனர் கொட்டாரம் ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றினர். பின்னர் தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் செயலர் மற்றும் ஆலோசகர் ராமசந்திரன் இந்நிகழ்விற்கு முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்கள் தங்களது உரையில் மாணவர்கள் கல்விக் காலத்திலேயே தங்கள் குறிக்கோளை நோக்கி பயணிக்கத் துவங்க வேண்டும் என்று ஊக்கமளித்தனர்.

இணைய உலகில் தங்களை நிலைநாட்டும் மாணவர்கள் நாளை இந்தியாவின் சாதனையாளர்களாக மாறலாம் என எடுத்துரைத்தனர். தொழில் நுட்பத்தில் தங்களை வளர்த்துக் கொள்வதன் வாயிலாக நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் தலைவர்களாக உருவாகலாம் எனவும் கூறினார்.

மேலும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களைத் தொழில் சார்ந்து தகுதிப்படுத்துவதே நமது நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்க ஓர் சிறந்த தீர்வு எனவும் எடுத்துரைத்தார்.

இத்தருணத்தில் கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, மேலாண்மையியல் துறையும் சென்னை, ஸ்கில்ஸ் டிஏ, நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.