சிபாகா சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் கட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரர் சங்கத்தின் (சிபாகா) சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு கோவை நவ இந்தியா பகுதியில் அமைந்துள்ள சிபாகா அலுவலகத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிபாகாவின் தலைவர் சுவாமிநாதன், செயலாளர் ராமநாதன், சமூக சேவை குழுவின் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மூவர்ண கொடி ஏற்றி தேசிய கீதம் பாடி கொண்டாடினர்.

மேலும் பொதுமக்களுக்கு தேசிய கொடி, துணிப்பை மற்றும் இனிப்புகள் வழங்கினர்.