கோவை கே.பி. ஆர் கல்லூரி மற்றும் எல் அண்ட் டி நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, எல் அண்ட்டி நிறுவனம் இணைந்து புதிய தொழில்நுட்ப பயிற்சி மையம் மாணவர்களுக்காக அறிமுகம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கே.பி.ஆர் குழும நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி மற்றும் கல்லூரி முதல்வர் அகிலா கலந்து கொண்டனர். எல் அண்ட் டி நிறுவனத்தின் கல்வி பிரிவு முதன்மை செயல் இயக்குனர் சபயாச்சி தாஸ், எல் அண்ட் டி நிறுவனத்தின் கல்லூரி தொடர்பு பிரிவு தலைவர் பெபின், மற்றும் எல் அண்ட் டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கே.பி.ஆர் கல்லூரியில் எல் அண்ட்டி-யின் தொழில்நுட்ப மையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் ராமசாமி மற்றும் சுப்பிரமணியம் கையெழுத்திட்டு பரிமாற்றிக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பெபின் கூறியதாவது: கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள இந்த நவீன தொழில்நுட்ப பயிற்சி மையம் மாணவர்களுக்கு, பல்வேறு நவீன தொழில்நுட்பங்களும் புதிய பாடத்திட்டங்களை பயில்வதற்கும், எளிதாக அமைந்திருக்கும்.

பயிற்சியின் போதே மாணவர்கள் தங்களுடைய சொந்த கருத்துகள்  வெளிப்படுத்துவதற்கும் மற்றும் உருவாக்குவதற்கும் இந்த மையத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுப்பிரமணியம் பேசுகையில்: நவீன உலகத்தில், தங்களுக்கென ஒரு நிலையான இடத்தை பெற முடியும், எல் அண்ட் டி நிறுவனத்தின் மிக நீண்ட கால தொழில்நுட்ப பயணத்தை குறிப்பிட்டு கல்லூரி மாணவர்களுக்காக தங்களுடைய தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்ள இந்த தொழில்நுட்ப பயிற்சி மையம் ஒரு புதிய முறைச்சியாக அமையும் என்றார்.

இது முதல் பயிற்சி மையம் என்றும் கோவையில் பெருமை வாய்ந்த  கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இந்த மையம் அமைப்பது பெருமை அளிப்பதாகவும், கற்றல் கற்பித்தல் பயணத்தில் இது இந்தியாவின் முதல் மையம் என்ற பெருமையையும் கொடுக்கிறது என்று தெரிவித்தார்.

ராமசாமி பேசுகையில்: எல் அண்ட் டி நிறுவனத்தார் நமது கல்லூரி வளாகத்தில் புதிய தொழில்நுட்பங்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி மையத்தை நமது மாணவர்களுக்காக அமைப்பதில் பெருமை கொள்கிறேன்.

அதுமட்டுமல்லாமல் இந்த தொழில்நுட்பம் பயிற்சி மையத்தில் பல்வேறு கட்டமைப்புகள் நிறுவப்படும் என்றும் இது மாணவர்களின் நல்ல தொழில்நுட்ப வாழ்க்கைக்கான தொடக்கப் புள்ளியாகவும் உயர்ந்தபட்ச சம்பளத்தில் அவர்களுடைய பொறியியல் பணியை துவக்க ஏதுவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டு பேசினார்.

மு.அகிலா கூறுகையில்: இந்தியாவிலேயே ஒரு புதிய முயற்சியாக   எல் அண்ட் டி நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு மையத்தை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் நிறுவுவது ஒரு கூட்டு முயற்சி, இந்த கூட்டு முயற்சியின் பயனாக கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களும் முழுமையான பயன் பெறுபவர்கள் அதுமட்டுமல்லாமல்  அவருடைய வாழ்வில் தனித் திறன் மிக்கவர்களாக உருவாக்க இந்த தொழில்நுட்ப பயிற்சி மையம் பயன்படும் என்றார்.

 

ARTICLE BY : பா. கோமதி தேவி