முடிவெடுக்கும் திறனே வெற்றிக்கு அடிப்படையானது! – கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஐ.கியூ.ஏ.சி மையம் சார்பில் வெற்றிக்கான மந்திரம் என்ற தலைப்பி்ல் ஆசிரிய மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் பாலுசாமி வரவேற்புரையும், கல்லூரியின் ஆலோசகரும், செயலருமான ராமச்சந்திரன் வாழ்த்துரையும் வழங்கினர்.

இந்நிகழ்விற்கு கே.பி.ஆர் கல்விக் குழுமத்தின் தலைவர், கே.பி.ராமசாமி சிறப்புரையாளராகக் கலந்துகொண்டு ‘வெற்றிக்கான மந்திரம்’ என்ற தலைப்பில் பேசினார். அவர் தமது உரையில், மாணவர்களின் கல்வி நலன் மற்றும் வெற்றியே ஆசிரியர்களின் முதல் குறிக்கோளாக இருத்தல் வேண்டும் என்று கூறினார்.

மாணவர்களுக்கு புரியும்படி புதுமையான முறையில் கற்றல், கற்பித்தல் இருத்தல் சிறப்பு என்பதை வலியுறுத்தினார். ஒவ்வொருவரின் வெற்றிக்கும் அடிப்படையானது முடிவெடுக்கும் திறன் என்பதால் தனித்து இயங்கக் கற்றுக் கொள்ளவேண்டும். மாணவர்களின் வளர்ச்சியே ஆசிரியரின் வளர்ச்சி, ஆசிரியர்களின் வளர்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி என்பதைக் கருத்தில் கொண்டு பணியாற்றிட எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் என்.ஏ.ஏ.சி மற்றும் ஐ.கியூ.எ.சி ஒருங்கிணைப்பாளர் பிரதீபா நன்றியுரை வழங்கினார். நிகழ்விற்கு கல்லூரி புலமுதன்மையர்கள் மற்றும் துறைத்தலைவர்கள், அனைத்துப் பேராசிரியர்கள் பங்கு பெற்றனர்.