ஜூவல் ஒன் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதன் முறையாக ஜூலை டூ ஜூன் வரை காலண்டர் அறிமுகம்

கே.ஜி மருத்துவனையில் ஜூவல் ஒன் நிறுவனம் சார்பில் இன்று மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

ஜூலை 1ம் தேதி உலக தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கே.ஜி. மருத்துவமனையில் ஜூவல் ஒன் நிறுவனம் சார்பில் சிறந்த மருத்துவர்களின் புகைப்படத்துடன் கூடிய காலண்டர்களை வழங்கி மருத்துவர்களை கௌரப்படுத்தினர்.

இந்த நிகழ்விற்கு கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம், ஜூவல் ஒன் நிறுவனத்தின் சீனிவாசன் மற்றும் வைத்தீஸ்வரன் சி.ஓ.ஓ பங்கேற்றனர். இங்கு டாக்டர் பக்தவத்சலம் கே.ஜி மருத்துவமனையில் பணி புரியும் சிறந்த மருத்துவர்களை அறிமுகப்படுத்தி, வாழ்த்துக்கள தெரிவித்தார்.

இவ்விழாவை சிறப்பித்துக்கூறிய பக்தவத்சலம், ‘மாதா ,பிதா, குரு, தெய்வம் மறைந்து பலவிதமான நோய்கள் வந்ததனால தான், தற்போது மாதா, பிதா, டாக்டர் அதுக்கப்புறம் குரு, தெய்வமாக மாறிவிட்டது’ என, தெரிவித்தார்.

ஜூவல் ஒன் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன், ‘கே.ஜி மருத்துவமனையில் எத்தனையோ நோயாளிகளை காப்பாத்தியிருக்காங்க, அதனால் தான் ஜூவல் ஒன் நிறுவனத்தின் மூலமாக இந்த மருத்துவர்கள் தினத்தை கொண்டாட விரும்பினோம்’ என்று கூறினார்.

ஜூவல் ஒன் நிறுவனத்தின் சி.ஓ.ஓ. வைத்தீஸ்வரன் கூறியதாவது, ‘சிறந்த மருத்துவர்களை தேர்ந்தெடுத்து, காலண்டர்களை உருவாக்கியுள்ளோம். இந்தியாவிலேயே முதன் முறையாக, ஜூலை 1 முதல் ஜூன் 30 ம் தேதி வரைக்கான காலண்டர்களை ஜூவல் ஒன் நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியுள்ளோம்’ என்றார்.