ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் சர்வதேச விண்வெளி சிறு கோள்விழா

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் சர்வதேச விண்வெளி சிறுகோள் தின விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஏரோநாட்டிக்கல் துறை தலைவர் டேவிட் ரத்தினராஜ் அனைவரையும் வரவேற்றார். இக்கல்லூரியின் துணை முதல்வர் கருப்பசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் யூ ஆர் ராவ், செயற்கைக்கோள் மைய நிலைய இயக்குனர் சுப்பிரமணி, பெங்களூர் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சைகுரு கோலேபை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை தலைவர் ராமசேஷன் மற்றும் இயக்குனர் சுரேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சுமார் அறுபது அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான 300 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் பேசும்போது, மாணவ மாணவியர்கள் சிறிய வயதிலிருந்தே விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு சிறுகோள்கள் உருவாக்கும் முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கொண்டு முயல வேண்டும். அதனைச் சார்ந்த பல்வேறு துறைகளில் சிறப்பான யுக்திகளை கொண்டு எவ்வாறு சாதிக்க இயலும் என கூறினர்.

மேலும், ஆசிய பசிபிக், ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் மாணவர் துறையை சார்ந்த பிராந்திய திட்ட அதிகாரி சுல்தான் கலீபா வெபெக்ஸ் மூலம் சிறுகோள்களின் தனித்துவத்தை பற்றி சிறப்புரையாற்றியது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.