திருப்பூரில் ஸ்ரீ கண்ணன் ஸ்மார்ட் சூப்பர் ஸ்டோர் திறப்பு

ரிலையன்ஸ் ரிடெய்ல் குழுமத்தின் சார்பில் ஸ்ரீ கண்ணன் ஸ்மார்ட் சூப்பர் ஸ்டோர் திருப்பூரில் திறக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் ரிலையன்ஸ் ரிடெய்ல் குழுமத்தின் சார்பில் துவக்கப்படும் முதல் ஸ்டோர். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் விதமாக இங்கு ஒரேஇடத்தில் மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள், பால் மற்றும் சமையலறைப்பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஆடை ரகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் என ஏராளமான பொருட்கள் குவிந்துள்ளன.

இந்த ஸ்டோரில் அனைத்து பொருட்களுக்கும் நிறைய சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இங்கு ஆண்டு முழுவதும் அனைத்து பொருட்களுக்கும் அதன்விலையில் இருந்து 6 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும், 1499 ரூபாய்க்கு பொருட்கள் வாங்குபவர்களுக்கு 1 கிலோ சர்க்கரை 9 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இது மாதாந்திர மளிகை பொருட்கள் வாங்குவதற்கான சிறந்த ஸ்டோராக இருக்கும்.

தமிழகத்தை பொறுத்தவரை திருப்பூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஸ்ரீ கண்ணன் ஸ்மார்ட் ஸ்டோரை தொடர்ந்து, ரிலையன்ஸ் ரிடெய்ல் குழுமத்தின் 46வது ஸ்டோர். இங்கு இந்த ஸ்டோர் போதுமான இட வசதியுடன் 14 ஆயிரம் சதுர அடியில் திறக்கப்பட்டுள்ளது.