தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம்; பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13 ஆயிரத்து 331 இடங்களை நிரப்புவதற்காக பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுருந்தது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தகுதியானவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி முடித்தவர்கள் சான்றிதழ் சரிபார்பிற்காக காத்திருப்பவர்கள் பலர் இருக்கும்போது, தகுதியில்லாதவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படுவதாக சர்சைகள் ஏற்பட்டது.

இதனால், பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து பல தரப்பட்ட எதிர்ப்புகளால் பள்ளிக் கல்வித்துறை தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் என, உத்தர பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் வரை தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.