ஆதார்-பான் இணைக்கா விடில் இரு மடங்கு அபராதம்

ஆதார்கார்டை பான்கார்டு உடன் இணைக்காவிட்டால் நாளை முதல் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆதார் அட்டையுடன் பல்வேறு ஆவணங்களை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் ஆதார் அட்டையுடன் பான்கார்டை இணைக்க அவகாசம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது அபராதத்துடன் இணைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜூலை1 ம் தேதி முதல் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்புக்கு இரு மடங்கு அபராதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவகாசம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூலை 1 முதல் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்கும் நபர்களுக்கு இரு மடங்கு அபராதமாக ரூ. 1000 அபராதம் செலுத்தவேண்டும்.

எனவே இரு மடங்கு அபராதத்தை தவிர்பதற்க்காகவே இன்று அல்லது நாளைக்குள் ஆதார் அட்டையை, பான் கார்டுடன் இணைத்துவிட அனைத்து மக்களுக்கும், வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.