கே.பி.ஆர். கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி துவக்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி கல்லூரியில் புதன் கிழமையன்று தொடங்கப்பட்டது. இந்த பயிற்சி ஜூலை 7ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சி ஆசிரியர்களின் திறனைத் தற்போதைய கணினி அறிவியல் தொழில் நுட்பத்துறையில் மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலுசாமி தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறையின் புல முதன்மையர் ஷர்மிளா வரவேற்புரை வழங்கினார்.

இக்கல்லூரியின் செயலாளர் மற்றும் ஆலோசகர் ராமசந்திரன் இந்தப் பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக (SkillsDA) இயக்குனர் கோட்ட ராம் ரமேஷ் கலந்து கொண்டு ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சியை துவக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, பேராசிரியர்கள் தற்போதைய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதன் அவசியத்தை எடுத்துரைத்து, சைபர் செக்யூரிட்டி ஒரு குறிப்பிட்ட துறைக்கு மட்டுமே உகந்தது அல்ல அனைத்துத் துறைகளிலும் பெரும் பங்கு வகிக்கிறது என்றும், (Block Chain) தொழில்நுட்பம் எந்த வகையில் வணிகத் துறையில் செக்யூரிட்டியை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என, எடுத்துரைத்தார்.