மன அழுத்தம் குறைக்க பலூன் ஊதலாம்

திருவிழாக்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எனப் பல நிகழ்வுகளிலும் தவறாமல் இடம்பிடிக்கும் பொருள் பலூன். பலூன் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். இந்த பலூனை ஊதுவதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.

மன அழுத்தத்துக்கு மட்டுமல்ல, நுரையீரல் நலனுக்கும் பலூன் ஊதுவது மிகச்சிறந்த பயிற்சி என, நுரையீரல் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பலூன் ஊதுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். அதோடு மன அழுத்தம் தரும் விஷயங்களை பலூனில் எழுதிவைத்து, அதைப் பறக்கவிடுவதன் மூலம் தீர்வு பெறலாம் என, மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு பலூனை கையில் எடுத்துக்கொண்டு 3-4 நொடிகள் மூச்சை உள்ளே இழுங்கள். அதன் பின் 5 – 8 நொடிகள் பலூனை ஊதுங்கள். இது யோக பயிற்சியை போன்று நல்ல பலனை கொடுக்கும். நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

பலூனை எவ்வளவு நேரம் இயல்பாக ஊத முடியுமோ, அதுவரைக்கும் ஊதலாம். ஊதும் போது மூச்சிரைத்தால் பயிற்சியை நிறுத்திக்கொள்ளலாம். எவ்வளவு வேகமாக பலூனை ஊதுகிறமோ, எத்தனை முறை மூச்சை உள்ளிழுத்து விடுகிறமோ, அதனால் நுரையீரல் எத்தனை முறை சுருங்கி விரிகிறது என்ற விவரங்களை வைத்து நுரையீரலின் ஆரோக்கியத்தை கண்டறியலாம்.

நாம் பலூன் பயிற்சியை தொடர்ந்து செய்யும் போது ஆழமாக சுவாசிக்க முடிகிறது. இதனால், திறமையாகவும் செயல்பட முடிகிறது. இது ஆரோக்கியமான சுவாசத்திற்கு வழிவகுக்கும். தினமும் மூன்று பலூன்களை ஊதுவதால் சுவாச பிரச்சனை வராமல் பாதுகாக்கும். நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கும்.

மூச்சுக்குழல் சரியாக செயல்பட்டால், நுரையீரலும் நன்றாக செயல்படும். இந்த பலூன் ஊதும் பயிற்சி புகைப்பிடிப்பவர்களுக்கு பல நன்மைகளை தரும். புகைப்பிடிப்பதால், நுரையீரல் பலவீனமாக இருக்கும். புகைப்பிடிப்பவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் கட்டாயம் இருக்கும் அவர்களுக்கு இந்த பலூன் ஊதும் பயிற்சி மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.