ஆகஸ்ட் 6 குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 19 ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்புமனு மீதான பரிசீலனை செய்ய ஜூலை 20 கடைசி நாள் என்றும், திரும்பப் பெறுவதற்கான ஜூலை 22 கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நடைபெற்ற ஆக.6ம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதில் 543 மக்களவை உறுப்பினர்கள், 233 மாநிலங்களவை உறுப்பினர்கள், 12 நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தற்போதைய குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் வெங்கய்ய நாயுடு மீண்டும் தொடர்வாரா அல்லது பாஜக சார்பில் புதிய வேட்பாளர் களம் இறங்குவாரா என விவாதங்கள் எழுந்துள்ளன. அதுபோல, எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.