கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடெமியில் பாராட்டு விழா

கோவை கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடெமியில் பயிற்சி பெற்று இந்திய வன பணிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஐ.ஃப்.எஸ் என்று சொல்லப்படும் இந்திய வன பணிக்கான நேர்முக தேர்வு ஜூன் மாதம் 23 வரை நடைபெற்றது. இறுதி தேர்வு முடிவுகள்  ஜூன் 28 அன்று வெளியிடப்பட்டன. அதில் நாடு முழுவதும் 108 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் கோவை கே. பி.ஆர் ஐ.ஏ.எஸ், அகாடெமியில் பயிற்சி பெற்று பின் அங்கேயே ஆசிரியராக பணிபுரியும் கிருபானந்தன் இந்திய அளவில் 16-வது இடமும், தமிழ்நாட்டில் முதல் இடமும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவருக்கான பாராட்டு விழா கே.பி.ஆர் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் கே.பி.ஆர். குழும நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி, கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் இயக்குனர் சிகாமணி ஆகியோர் வெற்றி பெற்றவருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

இதுகுறித்து கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி இயக்குனர் பழனி முருகன் கூறுகையில்:  2022-23ஆம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை மாதம் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது. மேலும் எங்களது பயிற்சி மையத்தில் வெளியூர் மாணவர்கள், மாணவிகள் தங்கி பயிற்சி பெறுவதற்கான வசதிகளும் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமல்லாமல், கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இப்பயிற்சியில் சேரலாம் என்று தெரிவித்தார்.