பிளாஸ்டிக் பாட்டில்களிலான கட்டிடம்

கொடைக்கானல் அருகே மன்னவூர் பகுதியில் வனத்துறையினர் பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து ஒரு கட்டிடத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்தியாவின் மிக அழகான பகுதியாக இருக்கும் கொடைகானல், மலைகளின் இளவரசி என்ற அழைக்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அதனால், பயன்படுத்தாத பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து வனத்துறையால் கட்டப்பட்டிருக்கும் கட்டிடத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர்.

சுற்றுலாப் பயணிகள் வெகுவாக கவர்ந்திழுக்கும் வகையில் வனத்துறை சார்பில் கொடைக்கானலில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும்  மன்னவூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயன்படுத்தாத பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு மண்ணை குலைத்து பிளாஸ்டிக் பாட்டில்களில் தேய்த்து பூசப்பட்டிருந்த அந்த கட்டிடம் பார்க்கும் போது நிஜத்தில் செங்கல் கட்டிடத்தை போலவே காட்சியளிக்கிறது. இது உண்மையிலே வியக்கதக்கவை என, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.