போக்குவரத்து விபத்துகள் குறித்து கலந்துரையாடல்

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன், மாநகரில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களிடம் போக்குவரத்து விபத்துகள் குறித்து கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், சாலை விபத்துகளே இல்லாத மாநகராக கோவையை கொண்டு வர நடவடிக்கைகளை எடுத்து வருதாக கூறினார். பள்ளி மாணவர்களிடம் இருசக்கர வாகனங்களை தர வேண்டாம் எனவும், லைசன்ஸ் இல்லாமல் அவர்கள் வாகனங்களை இயக்கினால் அவர்கள் மீதும், வாகனத்தை தந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

பெட்ரோல் பங்க்களிலும் ஹெல்மெட் அணியாமல் வந்தாலும், சீட் பெல்ட் அணியாமல் வந்தாலும் அங்குள்ள சிசிடிவிகளை ஆராய்ந்து வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் கூறினார்.

மேலும் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சவாரி அழைத்து செல்லும் போது ஒரு சிலர் தவறாக உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வண்ணம் செயல்படுவதாக புகார்கள் வருவதாகவும் இது போன்று இன்னொரு முறை புகார்கள் வராத வண்ணம் பார்த்து கொள்ளுமாறு கூறினார்.

இதில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் அவர்களுக்குள்ள சிக்கல்களையும் தேவைகளையும் முன்வைத்தனர்.