‘மை டி.வி.எஸ்’ 39 வது கிளை கோவையில் துவக்கம்

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை நிலையமான ‘மை டிவிஎஸ்’ கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனையில் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனமாக கொச்சியை தலைமையாகக் கொண்டு மை டிவிஎஸ் (Focuz Partsmart Pvt.ltd) இயங்கி வருகிறது.

இது கேரள மாநிலத்தில் 29 கிளைகளையும், கர்நாடகாவில் 3 கிளைகளும், தெலுங்கானா மற்றும் டெல்லியில் தலா ஒரு கிளைகளும் தமிழகத்தில் ஈரோடு, திருச்சி, சேலத்தில் தலா ஒரு கிளைகள் என இந்தியா முழுவதிலும் 38 கிளைகளைக் கொண்டு ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையில் முன்னணியில் திகழ்கின்றது.

இந்தியாவில் ஆட்டோமொபைல் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனையில் 44 வருடங்களாக முன்னிலையில் உள்ள இந்த நிறுவனத்தின் 39 வதுபுதிய கிளை கோவை ராம்நகரில் துவங்கியது.

மை டிவிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ ரவீந்திரன் நாயர் முன்னிலை வகித்தார்.
கோவை மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன் குத்துவிளக்கு ஏற்றினார். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாச ராகவன் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்.