ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் ‘டெக்னோஃபெஸ்ட்’

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் அனைத்து துறைகளின் துறை சார்ந்த தொழில்நுட்ப சிம்போசியம் – டெக்னோஃபெஸ்ட் – 2022 நடைபெற்றது.

இவ்விழாவில் ப்ரஸிவெர் லிமிடெட் தலைமை செயற்குழு அதிகாரி சிவராம் முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்கள் தங்கள் தனி திறமைகளை வெளிப்படுத்தி வாழ்வில் முன்னேறவேண்டும் என்று வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

கல்லூரியின் முதல்வர் பால்ராஜ் விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் மாணவர்களுக்கு ஒவ்வொரு துறையின் வாயிலாக பல போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் தேசிய மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் பலர் பங்கு பெற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்ளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.