கேள்வி கேட்காமல் வேலையை முடியுங்கள்

-வானதி சீனிவாசன் குற்றசாட்டு

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதிலும், மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல்  விலையை மத்திய குறைத்துள்ளது. மத்திய அரசு குறைத்தும், மாநில அரசு விலையை குறைக்கவில்லை என வானதி சீனிவாசன் கூறினார்.

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும்  நாடாக இந்தியா இருக்கிறது. உலகளவில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் கடந்த 1 வருடத்தில் மட்டும் 72 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவிலே விலை அதிகரித்த போதிலும், சாமானிய மக்களுக்கு ஏதாவது வகையில் உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே, கடந்த 3 நாட்களுக்கு முன்பு மத்திய அரசு மீண்டும் ஒரு விலை குறைப்பை அறிவித்தது.

கடந்த நவம்பர் மாதம் விலை குறைப்பின் போதே, தமிழகத்தில் விலையை  குறைக்கவேண்டி பா.ஜ.க போராட்டம் நடத்தினர். அதற்கும், மாநிலத்தின்  முதல்வர் செவிசாய்க்கவில்லை. இப்போதும், பெட்ரோலுக்கு 8 ரூபாய், டீசலுக்கு 6 ரூபாயும் குறைத்துள்ளது.

ஒரு சில மாநிலங்களான, கேரளா, இமாச்சல் போன்ற மாநிலங்களில் கூட பெட்ரோல் மீதான மாநிலத்தின் வரியை குறைத்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கமாட்டோம் என மாநிலத்தின் நிதி அமைச்சர் பிடிவாதம் பிடிக்கிறார். எந்த ஏழை மக்களுக்காக பேசுங்கள் என்று  பாஜக உறுப்பினர்களை பார்த்து ஸ்டாலின் அவர்கள் கூறினாரோ, அவர்களுக்காக தான் நாங்கள் கேட்கிறோம்.

தங்களது மாநிலத்தின் வரியை குறைக்காமல் ஒவ்வொரு வருடமும் மத்திய அரசை பார்த்து கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார் மாநிலத்தின் நிதி அமைச்சர். மாநிலத்தின் இலக்கையும் அடையமுடியவில்லை. ஆனால், எப்போதும் மத்திய அரசை குறை கூறுவதை மட்டும் சரியாக செய்கின்றனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லையென்றால், கோட்டையை சுற்றி முற்றுகை போராட்டம் 1 சில நாட்களில் நடக்கும் என்றார்.