XYXX நிறுவனத்தின் தூதராக கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் நியமனம்

ஆண்களுக்கான சிறந்த மற்றும் வசதியான உள்ளாடைகள் தயாரிப்பு நிறுவனமான XYXX விளம்பர தூதராக கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

யோகேஷ் கப்ரா தலைமையில், ஆண்களுக்கான உள்ளாடை தயாரிப்பில் இந்நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனம் துவங்கப்பட்ட நாள் முதல் புதுமை, கைவினைத்திறன், சிறந்த வடிவமைப்பு மற்றும் வாடிக்கையாளர் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து உள்ளாடைப் பிரிவில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தனது தயாரிப்புகளை உருவாக்க XYXX செயல்பட்டு வருகிறது.

மேலும் இந்நிறுவனம் புதுமையான உள்ளாடைகள், ஓய்வு ஆடைகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆடைகள் ஆகியவற்றையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இதன் நிறுவனர் யோகேஷ் கப்ரா கூறுகையில், கேஎல் ராகுல் இந்திய கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமானவர். அவரது கடின உழைப்பும் சாதனையும் அனைவராலும் பேசப்படுகிறது. உங்கள் உள்ளுணர்வை நம்புவதற்கான பிராண்ட் நம்பிக்கையை அவர் எடுத்துக்காட்டுகிறார். அவர் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரராக இருப்பதுடன், ஆடுகளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதை உண்மையாக வைத்திருக்கும் இளம், விவேகமுள்ள இந்திய மனிதனின் சரியான உருவகமாகவும் அவர் இருக்கிறார்.

எங்களின் முதல் பிராண்ட் தூதராக சிறந்த நபரான அவரை தேர்வு செய்திருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அவரை சந்தித்த நிமிடத்தில் இருந்தே எங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். தற்போதைய நிலைக்கு சவால் விடுவதற்கும், எங்களுடைய தனித்துவமான கதையைச் சொல்லுவதற்கும், இந்திய உள்ளாடைப் பிரிவிற்குள்ளும் அதற்கு அப்பாலும் நாங்கள் சிறந்த பிராண்டாகத் தொடர்வதற்கும் அவருடன் இணைந்து செயல்பட இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

இந்த கூட்டணி குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களின் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியை நான் பார்த்து வருகிறேன். அவர்கள் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டிவரும் இத்தருணத்தில் அவர்களின் பயணத்தில் நானும் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

XYXX–ன் செயல்பாடு, அவர்களின் சித்தாந்தம் மற்றும் நெறிமுறைகள், அனைத்தும் அவர்களின் விதிவிலக்கான தயாரிப்புகளில் பிரதிபலிக்கின்றன. மேலும் அவை சிறப்புமிக்கவையாக உள்ளன. இது அவர்களின் அபரிமிதமான வளர்ச்சிப் பாதையை காட்டுவதோடு, அனைத்து பகுதிகளிலும் விரைவான விரிவாக்கம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும், விசுவாசமான வாடிக்கையாளர் தளம் ஆகியவற்றிலும் பிரதிபலிக்கிறது.

நவீன கால இந்தியர்களுக்கு சிறந்த உள்ளாடை அனுபவத்தை வழங்கும் இந்த பிராண்டின் விளம்பர தூதராக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். XYXX நிறுவனத்தின் சிறந்த செயல்பாடுகளை பார்க்கையில் வரும் காலத்தில் ஆண்களால் விரும்பப்படும் பிராண்டுகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

முந்தைய நிதியாண்டில் இருந்து ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியானது 100 சதவீதத்தை எட்டி உள்ளது. தற்போது அதன் வர்த்தகமானது நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் ஷோரூம்களை 19 ஆயிரமாக விரிவுபடுத்த உள்ளது. மேலும் இந்த பிராண்ட் தயாரிப்புகள் அமேசான், மிந்த்ரா, அஜியோ மற்றும் அதன் இணையதளம் xyxxcrew.com உள்ளிட்ட 14 முக்கிய ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கின்றன.