கோவை மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினருக்கு நா.கார்த்திக் வாழ்த்து

கோவை மாநகராட்சியின் நியமனக்குழு உறுப்பினர் ராஜேந்திரனுக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில், நியமனக்குழு உறுப்பினர் பதவிக்கு மு. ராஜேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோவை மாநகராட்சி, நியமனக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜேந்திரனுக்கு, சிங்காநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நா. கார்த்திக் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்தார்.