இந்துஸ்தான் கல்லூரியில் கருத்தரங்கு

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஐசிடி அகாடமி பவர் செரிமனி இணைந்து “எபெக்டிவ் மெதொட் ஆஃ டெவலபிங் ஸ்கில்ஸ் அண்ட் கோல் செட்டிங்” என்கின்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தியது.

இதில் தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சிந்துஜா வரவேற்பு உரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் பொன்னுச்சாமி தலைமை உரை வழங்கினார்.

ஸ்மார்ட் லிப் கேரியர் சொல்யூஷன்ஸ் ரவிக்குமார் கருத்தரங்கு உரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து சர்வல் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட், ஹெச் ஆர் மற்றும் அட்மினிஸ்ட்ரேஷன், சஞ்சீவி ராஜ் விபி கருத்துரை வழங்கினார்.

இதில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியை சார்ந்த 250 கணினி அறிவியல் மற்றும் அறிவியல் துறை மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.