எஸ்.என்.எம்.வி கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோவை மாவட்டப் புகையிலை கட்டுப்பாட்டு விழிப்புனர்வு மைய ஒருங்கிணைப்பாளர் முரளி கிருஷ்ணன் பேரணியை துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், புகையிலையில் நிகோடின் என்ற அடிமைப்படுத்தும் பொருள் உள்ளதால் அது பற்றுநோயை ஏற்படுத்துகிறது. இதனால் வருடத்திற்கு இந்தியாவில் 9 லட்சம் பேர் பலியாகின்றனர் என்பது குறித்தும் புகையிலையால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பேசினார்.

இந்நிகழ்விற்கு பீடம்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் குமாரவேல் தலைமை வகித்தார். செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.