எம்.ஜி.எம் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைகள் இப்போது கோவையிலும்!

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர் தன்னுடைய முதலாவது புற்றுநோய் சிகிச்சை மையத்தை கோவையில் தொடங்கியுள்ளது.

எம்ஜிஎம் ஹெல்த்கேர் கோவையில் தன்னுடைய புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்க, கோவை பொன்னையா மருத்துவமனையுடன் எம்ஜிஎம் ஹெல்த்கேர் கூட்டுறவு மேற்கொண்டுள்ளது.

எழுத்தாளர், பெண்ணியவாதி மற்றும் பொதுப் பேச்சாளர் டாக்டர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், எம்ஜிஎம் ஹெல்த்கேரின் மார்பக புற்றுநோய் மற்றும் ஆன்கோபிளாஸ்டி மூத்த நிபுணர் டாக்டர் வேதா பத்மபிரியா. பொன்னையா மருத்துவமனையின் டாக்டர் கோபிநாத், சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் புற்றுநோய் அறுவைசிகிச்சை துறையின் மூத்த நிபுணர் டாக்டர் சிவகுமார் மகாலிங்கம், பொன்னையா மருத்துவமனையின் மருத்துவர் மனோபிரியா ஆகியோர் முன்னிலையில் இந்த மையம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த மையமானது அதிநவீன கட்டமைப்பைக் கொண்டிருப்பதுடன் கோவையிலேயே சிறப்புப் புற்றுநோய் சிகிச்சைக்கான ஆலோசளையை வழங்கும். நோயாளிகளை சந்திக்கச் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேரின் நிபுணர்கள் ஒவ்வொரு வாரமும் பயணம் செய்து இங்கு வருவார்கள்.

தொடக்க விழாவின் போது டாக்டர் வேதா பத்மபிரியா பேசுகையில், “எம்ஜிஎம் ஹெல்த்கேர் மற்றும் பொன்னையா மருத்துவமனை இணைந்து மேமோ ஆன் வீல்ஸ் (Mammo On Wheels) மற்றும் புற்றுநோய் மருத்துவமனையைக் கோவையில் தொடங்கியுள்ளன. மேமோ ஆன் வில்ஸ் மூலம் மக்களை அவர்கள் வீட்டு வாசலுக்கே சென்று மார்பக புற்றுநோய் உள்ளதா என்று பரிசோதனை செய்ய முடியும். மார்ச் 28 முதல் 30ம் தேதி வரை மேமோகிராம் கொண்ட பேருந்தானது கோவையின் பல பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம் 40 வயதைக் கடந்த பெண்கள் தங்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதைப் பரிசோதனை செய்து கண்டறியலாம்” என்றார்.

மேமோகிராம் பரிசோதனை செய்யும் ரேடியாலஜிஸ்ட் பெரும்பாலும் ஆண்களாக இருப்பதால் மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ளப் பெண்கள் தயங்குகின்றனர். இதை எதிர்கொள்ள சிறப்பு முயற்சிகள் மேற்கொண்டு முழுக்க முழுக்க பெண்கள் கொண்ட தொழில்நுட்ப குழு சென்னையிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த முன்முயற்சியின் மூலம் புற்றுநோய் சிகிச்சையில் பாலின இடைவெளியைக் குறைக்கவும், முழுமையான மார்பக புற்றுநோய் சேவையை கோவையைச் சேர்ந்த அனைத்து பெண்களுக்கும் வழங்க இருக்கிறோம்.

தொடக்க விழாவின் போது டாக்டர் சிவகுமார் மகாலிங்கம் பேசுகையில், “கோவையில் அடியெடுத்து வைத்திருப்பதிலும் பெருமிதம் கொள்கிறோம். இந்த மருத்துவ மையம் மூலம் மிகச் சிறந்த சேவை வழங்க உள்ளோம். கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் தரமான மிகவும் கட்டுப்படியான விலையில் மருத்துவ சேவையைப் பெறுவதே இந்த மையத்தை தொடங்குவதன் பின்னணி நோக்கம்.

அடுத்து வரும் பத்து ஆண்டுகளில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அவர்களுக்குத் தேவையான தரமான புற்றுநோய் சிகிச்சையின் தேவையும் அதிகரிக்கும். நோயாளிகள் தங்கள் வீடுகளுக்கு அருகில் மேம்பட்ட மருத்துவச் சிகிச்சை அளிக்கும் மையத்தை நாடுவதையே விரும்புவர்.

நோயாளிகளின் முதல் அணுகுமுறையை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். இது எங்களின் நிபுணத்துவத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும். எதிர்காலத்தில் இது போன்று மேலும் பல வெளிப்புற மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் மேம்பட்ட உயர் தொழில்நுட்பங்கள் கொண்ட மையங்கள் நோயாளிகளுக்கு மிக அருகிலேயே கொண்டு வருவோம்” என்றார்.