அறிவியல் ஆராய்ச்சித் திறன் ஆய்வகம்: வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்

கோவையில் நைஸ் அகாடமி (Nice academy) பள்ளியில் மத்திய அரசின் நிதி உதவியுடன் இளம் வயதினருக்கான ‘Atal Tinkering Lab’ (ATL) ஆய்வகத்தை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சித் திறனை வளர்க்க பிரதமர் நரேந்திர மோடியால் நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தலா ரூ.20 லட்சத்தில் ‘Atal Tinkering Lab’ (ATL) அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கோவை போத்தனூர் உள்ள நைஸ் அகாடமி பள்ளியில் இந்த ஆய்வகம், மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆய்வகம் மாணவ, மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கவும், ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ளது. ரோபோட்டிக் மற்றும் செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கும் வகையிலான நவீன உபகரணங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் பேசிய போது: இந்தியா முழுவதும் உயர்நிலைப்பள்ளி குழந்தைகளிடையே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றின் கற்றலை வளர்ப்பதற்காக அடல் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. பிரதமருடைய புதிய இந்தியாவை உருவாக்கும் உன்னதமான இத்திட்டம் இளைய சமுதாயம் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறையில் சாதிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கூட்டத்தில் பேசினர்.