“விழிப்புணர்வு கூட்டம் என முதல்வரிடம் சமாளித்து விடுவேன்”

மயிலாடுதுறையில் நடைபெற்ற திருமண மண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இவ்வளவு பேர் கூடியுள்ள கூட்டத்தில் பங்கேற்றதை தமிழக முதல்வர் நிச்சயமாக கேள்வி கேட்பார் என்றும் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் என்று சொல்லி முதலமைச்சரை சமாளிக்க உள்ளதாகவும் கூறினார்.

திருமண மண்டபம் திறப்பு விழா தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன் ஆகியோர் சிறப்பு அழைப்பினராக பங்கேற்றனர். இக்கூட்டத்தில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசு தலைமை கொறடா கோவி.செழியன், விழா ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை திமுக மாநாடு போன்று நடத்தியுள்ளதாக பேசினார்.

நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்: தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில்,  இவ்வளவு பேர் கூடியுள்ள கூட்டத்தில் நான் பங்கேற்றதை தமிழக முதல்வர் நிச்சயமாக கேள்வி கேட்பார். கொரோனா விழிப்புணர்வு கூட்டம் என்று சொல்லி முதலமைச்சரை சமாளிக்க உள்ளதாக கூறினார்.

கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளதால், மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் இக்கூட்டத்தை கொரோனா விழிப்புணர்வு கூட்டமாக நடத்தியதாக கூறி தமிழக முதல்வரிடம் நான் சமாளித்து விடுவேன். ஆனால் இந்த கூட்டம் மாநாடு போன்று நடப்பதாக கூறிய தலைமை கொறடா கோவி.செழியன் தான் முதல்வருக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்றும் சமாளித்து பேசினார்.