பி.எஸ்‌.ஜி மருத்துவமனையில்‌ ‘சாந்தம்‌’ மையம் தொடக்கம்

குணப்படுத்த முடியாத நாள்பட்ட நோய்களால்‌ பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும்‌ வகையில்‌ பி.எஸ்‌.ஜி மருத்துவமனையில்‌ சாந்தம்‌ என்ற ஆதரவு சிகிச்சை மையம்‌ தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

தி ரோட்டரி கிளப்‌ ஆப்‌ கோயம்புத்தூர்‌ சென்ட்ரல்‌, சாந்தம்‌ ஆதரவு நல்வாழ்வு சிகிச்சை மையத்தில்‌ அனுமதிக்கப்படும்‌ நோயாளிகளுக்கு உதவித்தொகை அளிக்க முன்வந்துள்ளது.

நீண்ட நாட்கள்‌ குணப்படுத்த இயலாத புற்றுநோய்‌, நுரையீரல்‌, இருதயம்‌. பக்கவாதம்‌ உள்ளிட்ட பல்வேறு நோய்களால்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌, அல்லது நாள்பட்ட நோய்களால்‌ பாதிக்கப்பட்டு குணப்படுத்த முடியாதவர்களை உடல்‌ ரீதியாகவும்‌, மன ரீதியாகவும்‌, ஆன்மிக ரீதியாகவும்‌ ஆதரவளிக்கும்‌ வகையில்‌ இந்த மையம்‌ செயல்பட உள்ளது. இந்த மையத்தில்‌ 40 படுக்கைகள்‌ உள்ளன.

இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி பிஎஸ்ஜி கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்‌ டாக்டர்‌ பாலாஜி (Project Director, Oncology, PSG Hospital) மற்றும்‌ பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இயக்குனர், டாக்டர்‌ புவனேஸ்வரன்‌, ரோட்டரி சங்கம்‌ சார்பில்‌ ராஜசேகர்‌ ஸ்ரீனிவாசன்‌ (District Governor 2021-22) மற்றும்‌ குமரேசன்‌ (District, Director), பாலகிருஷ்ணன்‌ (Assistant Governor), செந்தில்குமார்‌, சுப்ரமணியன்‌ (President)‌, டாக்டர்‌. பியூஸ்‌ பத்வா (Secretary & Project Chairman), வித்யாஷங்கர்‌ (Project Co-Ordinator)ஆகியோர் பங்கேற்றனர்.