ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில் பிரெஞ்ச் பாரம்பரிய உணவு தயாரிக்க மாணவர்களுக்குப் பயிற்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறை சார்பில், பிரெஞ்ச் பாரம்பரிய உணவு தயாரிப்புக் கலை குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் செயல் விளக்க நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

புளோரிடா மாகாணப் பல்கலைக்கழக இணை ஆய்வாளர் மற்றும் விஞ்ஞானியும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவருமான சௌஜி கோபாலகிருஷ்ணப் பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பிரெஞ்ச் பாரம்பரிய உணவு தயாரிப்பு முறைகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

காளான் சூப், ரோஸ்டட் சிக்கன் வித் வெலூத்தே சாஸ், போச்சிட் சிக்கன் உள்ளிட்ட பல வித உணவுகளை பிரெஞ்ச் பாரம்பரிய முறைப்படி எவ்வாறு தயாரிப்பது, அதற்கு என்னென்ன பொருட்கள் சேர்க்க வேண்டும், அதை எவ்வாறு காட்சிப்படுத்துவது என விளக்கம் அளித்தார்.

இதில் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றதுடன், செயல் விளக்கத்தின் மூலம் கற்றுக் கொண்ட உணவு வகைகளைச் சமைத்துக் காட்டி பாராட்டு பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறை இயக்குநர் தீனா மற்றும் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.