கோவையில் முதல் கார்ட்டூன் இணையதளம் தொடக்கம்

பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய கார்ட்டூனிஸ்ட் மதி, தற்போது இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதனுடைய தொடக்க விழா கோவை பந்தய சாலையில் உள்ள சக்தி குழும அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்

இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், கார்ட்டூனிஸ்ட் மதியின் கார்ட்டூன் மிகவும் ரசித்திருக்கிறேன். இந்த நிகழ்வுக்கு திட்டமிடல் எவ்வளவு முக்கியமாக உள்ளது என்பதை அறிந்து கொண்டேன் என கூறினார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது: பல விழிப்புணர்வுகளை கார்ட்டூன்களாக வரைந்து அசத்தி வருகிறார் கார்ட்டூனிஸ்ட் மதி. குடிநீர் வணிகமாக உள்ளது, அது இன்னும் வணிகமாக கூடாது என்றால் அதை நாம் சேமித்து வைக்க வேண்டும் என நீரின் தேவை குறித்து வலியுறுத்தினார்.

அடுத்ததாக என்னுடைய படம் டாக்டர் அக்டோபர் 9 ம் தேதி ரிலீஸாக உள்ளது. திரைப்படங்கள் எப்போதும் தியேட்டரில் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதே என் ஆசை. திரையரங்குகளில் படம் பார்த்து வளர்ந்தவன் என்பதே அதற்கு காரணம். தற்போதுள்ள காலசூழலில் எந்த தனிப்பட்ட சிந்தனையை மட்டும் இதில் திணிக்க முடியாது.

ஓடிடி தளங்களை பொறுத்தவரை அவற்றில் உள்ள நல்ல விசயங்களை மட்டுமே நான் பார்க்கிறேன். கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது திரையரங்கில் திரைப்படம் காண்பதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.