மாற்று திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள்

கோவை நேரு ஸ்டேடியம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கம் அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் புதன்கிழமை (21.07.2021) வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் எம். தேவேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் இச்சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.