சூரிய ஒளி பட்டால் கரையும் பிளாஸ்டிக் : சீனாவின் புதிய கண்டுபிடிப்பு!

நூறு ஆண்டு காலமாக இந்த பிளாஸ்டிக் மக்காமல் மண்ணில் இருந்து மண்ணை சேதப்படுத்தி கொண்டு இருக்கையில், சீனா ஆராய்ச்சியாளர்கள் புது விதமான பிளாஸ்டிக் ஒன்றை கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த பிளாஸ்டிக் ஆனது ஒரு வாரம் சூரிய வெளிச்சத்தில் இருந்தால் கரைந்து போகும் தன்மை கொண்டது.

சீனாவின் ஹுவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இந்த பிளாஸ்டிக் கண்டுபிடிக்கபட்டது. இது மேம்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் போலிமர் தயாரிப்பில் வேலை செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் pH அளவை பொறுத்து, அதன் நிறம் மாறுபடுகிறது. இதன் தனித்துவமான மூலப்பொருள் காரணமாக இணைப்பு சங்கிலிகளுடன் பிணைந்து உள்ளது. இந்த பிணைப்பு உடைந்தவுடன் , பொருளானது மறைந்து விடுகிறது.

இதை வைத்து அதன் நிறம் மாறுபடுவதையும், வெயிலில் வைத்தால் முழுவதுமாக சிதைந்து விடுவதையும் கண்டறிந்தனர். இதை கொண்டு இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது பற்றி பல்வேறு முறைகளில் ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

சூரிய ஒளி மற்றும் ஆக்ஸிஜன் வெளியில் உட்படும் போது இது முற்றிலும் சிதைந்து விடுகிறது. இந்த வகையான பிளாஸ்டிக் தயாரிக்கும் போது , இதிலிருந்து சக்சினிக் அமிலம் இயற்கையாக வெளிவருகிறது. மேலும் இந்த பிளாஸ்டிக் தயாரிப்பில் பல்வேறு முறைகளில் ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. இதை வணிக  ரீதியாக அனைத்திற்கு பயன்படுத்த முடியுமா என சந்தேகத்தை தொடர்ந்து இது போன்ற ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது.

இது வெயிலில் இருந்தால் சிதைந்து விடுவதால் இதை சோடாபாட்டிலாகவும், பிளாஸ்டிக் பைகளாகவும் தயாரிக்க முடியாது. காற்று புகாத இடங்களில் மட்டும் இது பயன்படுத்தி கொள்ளலாம். இது மிகவும் பாதுகாப்பானது. மாத்திரைகள் தயாரிப்பதில், உணவுகளில் இதை பயன்படுத்தி கொள்ளலாம். மொபைல் போன்களில் உள்ளே இருக்கும், காற்று புகாத பாகங்கள் தயாரிக்க இதை பயன்படுத்தி கொள்ளலாம். செல்போனில் உள்ளே இருக்கும் பாகங்கள் பெரும்பாலும் தூக்கி எறியப்பட்டு குப்பைகளாக இருக்கும். இந்த குப்பைகள் குறைப்பதற்கு இந்த புது பிளாஸ்டிக் பயன்படும்

இந்த பிளாஸ்டிக் பல்வேறு வகைகளில் பயன்படுத்துவது பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது. சில மின் சாதன பெட்டிகளில் உள்ளே இருக்கும் பிளாஸ்டிக் பொருள்களை இதை கொண்டு தயாரிப்பதன் மூலம், அவை பயன்படுத்தி முடித்த பிறகு பெரும்பாலும் குப்பைகளாக மாறுவது குறைக்கப்படும். இதன் மூலம் மின் சாதன பிளாஸ்டிக் கழிவுகள் குறைக்கப்படும். எங்கு எல்லாம் காற்று புகாமல் இருக்கிறதோ, பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறதோ அங்கு எல்லாம் இந்த வகையான பிளாஸ்டிக் பயன்படுத்துவது பற்றி பல விதங்களில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.