தமிழ்நாடு வேளாண் பல்கலையில் கிரிகர் மெண்டலின் 200வது பிறந்தநாள் விழா

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம் சார்பில் “மரபியல் தந்தை கிரிகர் மெண்டலின் 200வது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம் நாளை (20.7.2021) காலை 10 மணிக்கு இணைய வழியில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ. குமார் இந்நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றுகிறார். பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி இயக்குநர் மகேஸ்வரன், உரையாற்றுகிறார்.