அடுத்த ஆண்டு வெளியாகும் பொன்னியின் செல்வன் பகுதி 1

படக்குழு அறிவிப்பு

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கி வருகிறார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் – ஜெயமோகன், இசை – ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன். மெட்ராஸ் டாக்கீஸும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

Image

பொன்னியின் செல்வன் படம் இரு பாகங்களாக வெளிவரவுள்ளது. இதையடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. போஸ்டரில் ஏ.ஆர். ரஹ்மான், ரவி வர்மன், தோட்டா தரணி, ஸ்ரீகர் பிரசாத், ஜெயமோகன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. படம் 2022-ல் வெளியாகவுள்ளது.